புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட 242 இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2025 புத்தாண்டின் போது, பைக் ரேஸில் ஈடுபடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை எச்சரித்தது.
அதுபோன்று, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களாகச் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கும் விதமாக, சென்னை மாநகரில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் போலீஸ் எச்சரிக்கையும் மீறி, பைக் ரேஸ், வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 242 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா