‘தவெகவினர் அராஜகம்.. குறிவைத்து தாக்கப்படும் பத்திரிகையாளர்கள்’ சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 5:39 PM

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பது பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “சில தினங்களுக்கு முன், ஆந்திரமாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ‘தி வீக்’ இதழில் பணியாற்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தொழில் முதலீடு தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினார். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் செயல்படும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுடைய விரிவாக்க திட்டங்களுக்கு ஆந்திர மாநிலத்தை நாடுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாவது குறித்து அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு பத்திரிகையாளராக இந்த கேள்வியை எழுப்புவது அவருடைய கடமை. அந்த வகையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கேள்வியை கேட்டதற்காக சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் பத்திரிகையாளர் லஷ்மி சுப்பிரமணியனுக்கு எதிராக அருவெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தவெக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ந்து வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து, அருண்ராம் அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை தவெக ஆதரவாளர்கள் சமூக வலைளதங்களில் பதிவிட்டு வருகின்றனர். தவெக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை அருண்ராம் மற்றும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வின் புகைப்படத்தை அருண்ராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ கோரிக்கை’யின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அருண்ராம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தவெக அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பதால், சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர் பிரபாகரன் தமிழரசு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ‘ஹாக்’ செய்ய சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

ஒருகேள்வி கேட்டதற்காக பெண் பத்திரிகையளாரையும் அவருடைய குடும்பத்தினரையும் இழிவாக பேசுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையை எழுதியதற்காக சமூக வலைதளப்பக்கத்தின் பதிவுகளை அதிகாரத்தை பயன்படுத்தி நீக்கம் செய்வதும், சமூக வலைதளக் கணக்கை முற்றிலும் முடக்க நினைப்பதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel