சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கட்சியின் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்து கொண்டார். அவர் முதல் வரிசையைில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அருகில் அமர்ந்தது கவனம் பெற்றது.
இதற்கிடையே ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் பிஸியாக இருப்பதாக கூறி அந்த அழைப்பை திமுக தலைவர் ஸ்டாலின் பேச மறுத்ததாகவும் வாழ்த்து மட்டும் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், “உங்களுக்கு சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் வந்ததாகவும் நீங்கள் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் தகவல்கள் வருகிறது” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், “அழைப்பிதழ் எல்லாம் வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன். கடிதமும் அனுப்பி இருக்கிறேன்” என்று பதிலளித்தார்









