பொய் சொல்லும் கர்நாடக முதல்வர்.. 6 மாதம் கடந்தும் தொடரும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – துரை வைகோ குற்றச்சாட்டு

By Pandeeswari Gurusamy

|

Published on 18 Nov 2026, 12:02 PM

பொய்சொல்லும் கர்நாடக முதல்வர்.. 6 மாதம் கடந்தும் தொடரும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அதிமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைக்க முயற்சித்தார்கள்; அது கைகூடவில்லை. ஆனால் இன்றும் மறைமுகக் கூட்டணிக்கான முயற்சிகள் நடைபெறுகின்றன” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி நதிநீர் பகிர்வு குறித்து உச்ச நீதிமன்றமும், காவிரி நதி நீர் தீர்ப்பாயமும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. ஆனால், கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். காவிரியில் இருந்து 177 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வர வேண்டும். இதைப் பாதிக்கும் வகையில் எந்த வேலையும் செய்யக் கூடாது எனத் தீர்ப்பில் தெளிவாக இருந்தாலும், கர்நாடக முதல்வர் காவிரித் தீர்ப்பைத் திரித்துப் பேசிப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் மேடையிலேயே கர்நாடக முதல்வர் இதைப் பேசுகிறார்.

தமிழக அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு ஒன்றிய அரசுதான் தீர்வைக் கொடுக்க வேண்டும். இந்நிலையில், பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே கர்நாடக முதல்வர் தவறாகப் பேசுகிறார்; தமிழக பாஜக தலைவர்கள் இதைக் கேட்க வேண்டும். இது குறித்துச் சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

குதிரை பேரத்தில் திமுக:

மேலும் பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை மறுத்து, மறைமுகக் கூட்டணி வைக்க முயன்றனர். ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தனர். 6 மாதம் கடந்தும் ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருகின்றனர். ரூ.40 கோடி கொடுக்கக் கூடத் தயாராக இருக்கும் திமுக தலைமைதான் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவுடன் மறைமுகக் கூட்டணி வைக்க முயற்சித்தார்கள்; அது கைகூடவில்லை. ஆனாலும், இன்றும் மறைமுகக் கூட்டணிக்கான முயற்சிகள் நடைபெறுகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel