ஆங்கில புத்தாண்டையொட்டி கலைஞர் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று (ஜனவரி 1) விமரிசையாக வாணவேடிக்கை, ஆட்டம், பாட்டம் என விமரிசையாக கொண்டாடப்பட்டது.

திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து “உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்” என ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இரவு 9 மணியளவில் தனது தந்தையும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செய்தார்.
பொதுவாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் கூட்டாக சென்று கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் புத்தாண்டையொட்ட்டி ஆசி பெறும் விதமாக தனிப்பட்ட முறையில் மனைவி துர்காவுடன் சென்று ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்துள்ளார்.

பின்னர் கலைஞர் நினைவிடத்திற்கு வெளியே சாலையில் நின்றிருந்த மக்களையும் சந்தித்து தனது புத்தாண்டு வாழ்த்துகளை அவர்களுடன் கைகுலுக்கி பகிர்ந்து கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விடாமுயற்சி.. விட மாட்டாங்க போல : அப்டேட் குமாரு
தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!