பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ராஜா

தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி டி.ராஜா பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.  

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி செப்டம்பர் 13 நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

நீதிபதி சுந்தர்மோகனுடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை அவர் விசாரித்து வந்தார்.

முந்தைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி  துரைசாமி இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் எம்.துரைசாமி நேற்றுடன் (செப்டம்பர் 21) பணி ஓய்வு பெற்றார்.

T Raja was sworn

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என்று வழியனுப்பு விழாவில் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பேசியிருந்தார்.

முன்னதாக உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.ராஜா அந்த பொறுப்பை வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நீதிபதி டி.ராஜா இன்று (செப்டம்பர் 22)உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும்  வழக்குகளை அவர் விசாரிக்கின்றார்.

கலை.ரா

எடப்பாடிக்கு  அமித் ஷா அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது இப்படிதான்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.