yநடித்தால் விஜய் சேதுபதியாகத்தான் நடிப்பேன்!

public

நடிகர் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி ரீ மேக்கிலிருந்து நடிகர் ஷாருக்கான் விலகியுள்ளார்.

புஷ்கர் – காயத்ரி தம்பதியரின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மாதவன் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கேங்ஸ்டராகவும் தோன்றினார். இப்படம் இருவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் டீசரை பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷா ருக் கான் வெளியிட்டு பாலிவுட் வரை பேசக்கூடிய திரைப்படமாக வளர்ந்தது. இந்தப் படத்தை பார்த்த ஷா ருக், இதன் இந்தி ரீமேக்கில் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் படத் தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டது.

தமிழில் இயக்கிய புஷ்கர் – காயத்திரி இந்தியில் இப்படத்தை இயக்குவதை ஷா ருக் கான் விரும்பவில்லை என்று பாலிவுட் லைஃப் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ‘எம்.எஸ்.தோனி’, ‘ வெட்னஸ் டே’, ‘ஸ்பெஷல் 26’ போன்ற, பாலிவுட்டில் வெற்றிப் படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். நீரஜ் பாண்டேவும் ஷா ருக் கானுக்கு ஆதரவாக அவர் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த இரு விவகாரங்களின் காரணமாக இந்த படத்தின் ரீமேக்கிலிருந்து ஷா ருக் கான் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *