Xகமல் ஹாசன் பாணியில் ஸ்ருதி ஹாசன்

public

P

கமல் ஹாசனையடுத்து அவரது மகள் ஸ்ருதி ஹாசனும் தற்போது புதிய களத்தில் இறங்கியுள்ளார்.

இந்திய சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராக விளங்கிவருபவர் நடிகர் கமல் ஹாசன். திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும் நிலையில், திடீரென தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள்ளும் களமிறங்கிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் . அந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அவர் அந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனையும் தொகுத்து வழங்கினார். அடுத்த சீஸனையும்கூட அவரே தொகுத்து வழங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தனது தந்தை கமல் ஹாசனைப் போலவே தானும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ தற்போது நடிகை ஸ்ருதி ஹாசனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெறவுள்ளார். அந்தவகையில் சன் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள ‘ஹலோ சகோ’ எனும் நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார் ஸ்ருதி.

நடிகர்கள் பெரிய திரையிலிருந்து சின்னத் திரைக்கும் படையெடுக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. நடிப்பு, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அரசியல் என பிஸியாக இயங்கிவரும் நடிகர் விஷால் தற்போதுதான் சன் டியில் ‘சன் நாம் ஒருவர்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவருகிறார். அதேபோல நடிகர் பிரசன்னா சன் லைஃப் சேனலில் ‘சொப்பன சுந்தரி’ எனும் நிகழ்ச்சியையும் நடிகை வரலட்சுமி ஜெயா டிவியில் ‘உன்னை அறிந்தால்’ எனும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *