vமுந்திரிப் பருப்பு ஏற்றுமதியில் நம்பிக்கை!

public

முந்திரி ஏற்றுமதி இந்த ஆண்டில் 5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று இக்ரா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து *இக்ரா*வின் துணைத் தலைவரான ஸ்ரீனிவாசன் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ‘2012ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 1.02 லட்சம் டன் அளவிலான முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அப்போது சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் முந்திரி ஏற்றுமதி 27 விழுக்காடு சந்தைப் பங்குடன் இருந்தது. வியட்நாம் 58 விழுக்காடு சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் அதன்பிறகு இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு 3 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 88,000 டன் முந்திரி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச ஏற்றுமதியில் 19 விழுக்காடு மட்டுமே. இதே காலகட்டத்தில் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து தற்போது 74 விழுக்காடு சந்தைப் பங்குடன் அந்நாடு ஆதிக்கம் செலுத்துகிறது.

வியட்நாமின் இயந்திரமயமாக்கல் நடவடிக்கைகள், குறைந்த ஊதியம் போன்றவற்றால், குறைந்த விலைக்கு முந்திரியை வியட்நாம் வர்த்தகர்கள் விற்பனை செய்வதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இருந்தாலும் சர்வதேச சந்தையில் இருக்கும் வலுவான தேவை காரணமாக இந்தியாவுக்கும் ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. சர்வதேசச் சந்தையிலும், உள்நாட்டிலும் முந்திரிப் பருப்புகள், முந்திரி பருப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தின்பண்டங்களுக்கு வலுவான தேவை இருக்கிறது. இந்த ஆண்டில் முந்திரியின் உள்நாட்டு நுகர்வு 6 முதல் 8 விழுக்காடு அதிகரிக்கும். ஏற்றுமதியும் 5 விழுக்காடு வரை அதிகரிக்கும்” என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *