Tதயாரிப்பாளராகும், சன்னி லியோன்

public

பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வரும் பிரபல நடிகை சன்னி லியோன், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். 34 வயதாகும் அவர் ட்ராமா – திரில்லர் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். பெயர் குறிப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அத்துடன் சூப்பர் ஹீரோ படம் ஒன்றையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள சன்னி லியோன், அதற்கு முன்னதாக இந்த ட்ராமா – திரில்லர் படத்தைத் தயாரிக்கிறார். இதுவரை நடிகையாக, படத்தின் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்த சன்னி லியோன், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரே நடிக்கவும் உள்ளார். படத்தில் பங்காற்ற உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *