tதங்க முட்டையிடும் சைபர் பாதுகாப்புத் துறை!

public

சைபர் பாதுகாப்புத் துறையில் ஊழியர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும், இத்துறையில் கவனம் செலுத்தி அதிக சம்பளத்துடனான வேலைகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் இந்திய இளைஞர்களை ஐபிஎம் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவை ஒரு சந்தையாகவும், சைபர் பாதுகாப்பில் உலகச் சந்தைக்கு சேவை வழங்கத் தகுதியான திறமைகளைக்கொண்ட நாடாகவும் ஐபிஎம் நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் சைபர் பாதுகாப்பு ஊழியர்களுக்கான தேவை 30 லட்சமாக இருக்கிறது. ஆனால், ஒரு லட்சம் ஊழியர்கள்கூட சைபர் பாதுகாப்புப் பணியில் இல்லை என்று ஐபிஎம் இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்புத் தலைவர் கார்த்திக் ஷஹானி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐபிஎம் இந்தியாவின் இயக்குநர் அனந்த குமார் வைத்தீஸ்வரன் பேசுகையில், “ஊழியர்களைக் கண்டறிய முடியுமா என்றால் முடியும். ஆனால், போதுமான அளவிலான ஊழியர்களைக் கண்டறிய முடியுமா? தற்போது இருக்கும் ஊழியர்களை விடக் கூடுதலான ஊழியர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்று கூறினார்.

ஐபிஎம் இந்தியாவின் வருவாயில் சைபர் பாதுகாப்பு சேவைகளுக்குச் சிறப்பான பங்கு இருப்பதாகவும், சைபர் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும் கார்த்திக் ஷஹானி விளக்கினார். “மற்ற ஊழியர்களை விட சைபர் பாதுகாப்பு ஊழியர்களால் எங்களுக்கு அதிகமான வருவாயை ஈட்டித்தர முடியும்” என்று கார்த்திக் ஷஹானி கூறினார். மேலும் அனந்த குமார் வைத்தீஸ்வரன் பேசுகையில், “சைபர் பாதுகாப்புத் துறைக்குத் தகுதியான ஊழியர்களை உருவாக்கப் பள்ளி, கல்லூரி அளவிலான கல்வியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதற்கான தேவை உள்ளது. இளைஞர்கள் சைபர் பாதுகாப்புத் துறையை வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிலாகப் பார்ப்பதில்லை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *