sஎலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு மாறும் கேரளா!

public

c

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களை விட கேரளாவின் நகர்ப்புறங்கள் மிகவும் தூய்மையானதாக உள்ளன. எனினும், கேரள நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கேரள அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (Kerala State Road Transport Corporation – KSRTC) கட்டுப்பாட்டில் 6,400 பேருந்துகள் இயங்குகின்றன. கேரளப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 20 விழுக்காட்டினரை அரசுப் பேருந்துகள் இடமாற்றம் செய்கின்றன. அடுத்த ஆறு மாதங்களுக்குள் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்காக 300 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக கேரள அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவரான தாமின் ஜே.தச்சன்கரி மின்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சாலைகளில் எலெக்ட்ரிக் பேருந்துகளை சோதிப்பதற்காக, ஜூன் 18ஆம் தேதி முதல் 15 நாள் சோதனை ஓட்டத்தைத் தொடங்கவிருப்பதாகவும், அதன்பிறகு ஏலப் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் பேருந்துகளில் குளிர்சாதன வசதி மட்டுமல்லாமல் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதிகளும் இருக்கும். இதெல்லாம் போக, இந்தப் பேருந்துகள் நச்சு வாயுக்களை வெளியிடாது என்பதும், சத்தமும் ஏற்படாது என்பதும் இவற்றின் தனிச்சிறப்பு. நகரங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட சில வழித்தடங்களில் சேவையைத் தொடங்குவதற்காக, டீலர்களிடமிருந்து எலெக்ட்ரிக் பேருந்துகளை ஏலத்துக்கு எடுக்கக் கேரள அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *