sஅஜித்தின் பிறந்த நாள் சிறப்புக் காட்சிகள்

public

பண்டிகை நாள்களைப்போலவே தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடித் தீர்ப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது, முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்குவது உள்பட பல சமூக சேவைகளை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு செய்துவரும் அஜித் ரசிகர்கள், அவருடைய பிறந்த நாளை இந்த ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும்வகையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் வரும் மே 1ஆம் தேதி அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை 4 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அஜித்தின் ‘வீரம்’, ‘வேதாளம்’ மற்றும் ‘மங்காத்தா’ படங்களைத் திரையிட பல திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *