Qநிலையான வளர்ச்சியில் இந்தியா!

public

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா அடுத்த பத்தாண்டுகளுக்கு தக்க வைத்துக்கொள்ளும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜம்மு பல்கலைக் கழகத்தில் நடந்த 17ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. இது அடுத்த பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும். சீனா கடந்த முப்பது ஆண்டுகளாக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக விளங்குகிறது. இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் நிறைந்துள்ளன. மேலும், பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் இந்தியா கொண்டுள்ளது.

அடுத்த இருபது ஆண்டுகளுக்கான சிறப்பான எதிர்காலத்தையும் இந்தியா கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு ஏற்ற பகுதி தான். ஆனால் இங்கு நடைபெறும் கிளர்ச்சிகளால் முடங்கியுள்ளது. இங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கல்வி அளிப்பதன் மூலம் இந்த மாநிலத்தில் அமைதியையும், மேம்பாட்டையும் அளிக்க இயலும்” என்றார். இந்த நிகழ்வில் அங்கு பயின்ற 185 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரையில் சிறந்த சுற்றுலாத் தளம் மட்டுமின்றி, வேளாண்மையிலும், கைவினைப் பொருட்கள் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *