qநடிகர் சங்க கட்டடம் : அடிக்கல் நாட்டு விழா!

public

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக்கொடுத்து கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கிவைத்தனர். நடிகர் சங்க புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினியும், கமலும் சற்று தாமதமாக கலந்துகொண்டனர்.

பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, அவர்களும் அடிக்கல்லை நாட்டினர். ரஜினி, கமல் இவ்விழாவில் தாமதமாக கலந்துகொள்வார்கள் என்று கூறினர். இந்நிலையில், சரியாக 11.30 மணியளவில் இந்த விழாவில் கமல் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மலேசியப் பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு 12.00 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வருகைதந்த ரஜினியும், புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்து கமல் பேசும்போது, ‘நடிகர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. இந்தக் கட்டடம் கலைஞர்களின் கோட்டையாக மாறும்’ என்று கூறினார். பின்னர் ரஜினி பேசும்போது, ‘அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இனி, அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்’ என்று பேசினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஜீவா, பிரகாஷ் ராஜ், விஜயகுமார், செந்தில், நடிகைகள் சிம்ரன், கோவை சரளா, சோனா, சாக்சி அகர்வால், நந்திதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். நடிகர் சங்க கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்று செங்கல் எடுத்துவைத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராய நகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதவியேற்றவுடன் அறிவித்தார்கள். இக்கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் பூமி பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் இணைந்து முதல் செங்கலை வைத்தார்கள். அதைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருமே ஒரு செங்கல் எடுத்துவைத்தார்கள்.

இவ்விழாவில் கலந்துகொண்டு செங்கல் எடுத்து வைத்துவிட்டு கமல் பேசியது, ‘கட்டடமாக இருந்து, கல்லாகி மறுபடியும் கட்டடமாக எழும்வரை இந்த சரித்திர சக்கரத்தின் சுழற்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி செய்ததில் மிகவும் சந்தோஷம். இந்தக் கல்லில் நானும் ஒரு சிமெண்ட்டாக இருந்ததில் மகிழ்ச்சி. புதிய கட்டடம் கலைஞர்களுக்கு ஒரு பெரிய கோட்டையாக அமையும்’ என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பேசும்போது, ‘இந்த அடிக்கல் நாட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இனிமேல் அனைத்துமே வெற்றிகரமாக நடக்கும்’ என்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *