qசாந்தா கோச்சருக்குப் பதில் புதிய அதிகாரி!

public

சாந்தா கோச்சர் மீதான விசாரணை முடியும் வரை அவர் விடுப்பில் செல்வதாகவும், அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாக்க அதிகாரியை நியமிப்பதாகவும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் வேணுகோபால் தூத் என்பவருக்குச் சொந்தமான வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் வழங்கியுள்ளது. இதில் அவ்வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வீடியோகான் நிறுவனத் தலைவர் மற்றும் சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் நியூபவர் ரினியூவபிள்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குப் பரிமாற்றத்தில் மோசடி செய்ததையும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கண்டறிந்துள்ளது. இந்த விவகாரத்தில் மூவருக்குமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சாந்தா கோச்சரின் பதவிக்கும் இந்த விவகாரத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளிடையே சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் முழுநேர இயக்குநராகவும் சந்தா கோச்சருக்குப் பதிலாக சந்தீப் பாக்ஸி நியமிக்கப்படுவதாகப் பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் அவ்வங்கி தெரிவித்துள்ளது. தற்போது சந்தீப் பாக்ஸி ஐசிஐசிஐ புரூடன்சியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும் உள்ளார். செபியின் ஒப்புதல் கிடைத்தவுடன் இவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சாந்தா கோச்சர் விடுப்பில் செல்வதாக அவ்வங்கி கூறுகிறது. விடுப்பில் செல்வதாகக் கூறப்பட்டாலும் சாந்தா கோச்சர் மீண்டும் வங்கிப் பணிக்குத் திரும்புவது சந்தேகம்தான்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *