Pஆட்சி தொடர வேண்டும்: இல.கணேசன்

public

அதிமுக ஆட்சி வரும் நான்கு ஆண்டுகளும் தொடர வேண்டுமென்பதே மக்களின் விருப்பமாக உள்ளதாக, பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக-வின் இரு அணிகளும் ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த 21ஆம் தேதி ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இணைந்தன. கூட்டத்தில் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழுக் கூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் இரண்டாவது முறையாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் இணைப்பு காரணமாகவே இந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவலும் வெளியாகின.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (ஜூலை 23) மதுரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், “முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முஸ்லிம் பெண்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வைப் பொறுத்தவரை உட்கட்சி பிரச்னைதான் உள்ளது. பன்னீர்செல்வம் பிரிந்தவுடன் ஆட்சி கலைந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதிமுக ஆட்சி இன்னும் நான்காண்டுகள் தொடர வேண்டும். அதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது. அதிமுக-வின் இரு அணிகளும் பிரிந்ததிலும், இணைந்ததிலும் எங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. நிலைமை இப்படி இருக்க எங்களை ஏன் குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இது வருந்தத்தக்கதாக உள்ளது.

நீட் தேர்வு வேண்டும் என்பதில் தமிழக மக்களிடையே ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. சட்டத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழக அரசுடன் இணைந்து நாங்களும் போராடினோம். ஆனால் நீதிமன்ற உத்தரவை மதித்துதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *