a
தமிழகத்தில் நாளை முதல் 12 நாட்களுக்கு கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 31ஆம் தேதி வரை நடைபெற விருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 21ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிறு விடுமுறையை தவிர்த்து ஜனவரி 10ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன.
�,