oகறுப்பு – வெள்ளை – சிகப்பு கொடியுடன் விஜய்

public

விஜய்யிடம் நல்ல வைபரேஷன் இருக்கிறது. அவரை சுற்றி இருப்பவர்கள் சரியில்லை. சரியான நேரத்தில் தவறான அட்வைஸ் கொடுத்து கெடுத்துவிடுகிறார்கள் என்றெல்லாம் ஆயிரம் விமர்சனங்கள் வைத்தாலும், திரைப்படங்களில் இடம்பெறும் அரசியல்களுக்கு முழுப்பொறுப்பு அவரே தான். இதோ, மெர்சல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு ஃபோட்டோ விஜய்யின் அரசியல் சர்ச்சைக்கு மீண்டும் இடம் கொடுத்திருக்கிறது. விஜய்யின் பழைய அரசியல் சர்ச்சைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் கட்டுரை உதவும்.

[விஜய்யின் அரசியல் மெர்சல்கள்](https://www.minnambalam.com/k/2017/06/22/1498069828)

மெர்சல் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையிலுள்ள பின்னி மில்லில் நடைபெற்றுவருகிறது. இந்த ஷெட்யூலுக்காக திருவல்லிக்கேணி பகுதியையே முழுவதுமாக செட் போட்டு உருவாக்கியிருக்கிறார்கள். அதற்கு திருவல்லிக்கேணி பகுதியிலேயே ஷூட்டிங் எடுத்திருக்கலாம்தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற எந்திரன் 2.0 படப்பிடிப்பு பிரச்னையால், நெருக்கமான சாலைகளில் படப்பிடிப்பு நடத்துவதை சில மாதங்களுக்கு தவிர்க்கும்படி திரையுலகினரிடம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த ஷெட்யூலில் படமாகும் காட்சிகள் அனைத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்பதால் பின்னி மில்லில் செட் போட்டிருக்கிறார்கள். அங்குதான் விஜய்யின் அதிதீவிர ரசிகர்களில் ஒருவரான பெங்களூரைச் சேர்ந்த கௌஷிக் தனது பெற்றோர்களுடன் சேர்ந்து மெர்சல் படக்குழுவினரை சந்தித்திருக்கிறார்.

மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராமசாமியை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து படத்தின் நிகழ்வுகள் பற்றி கௌஷிக் பேசியிருக்கிறார். அப்போது திரைப்படத்தின் இசை ஆகஸ்டில் வெளியிடப்படும் என்றும், மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்றும் அவர் தெரிவித்ததாக ட்விட்டரில் கௌஷிக் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், விஜய்யுடன் ஃபோட்டோ எடுக்கவேண்டும் என்று கேட்டபோது, மெர்சல் படத்தில் விஜய்யின் மூன்றாவது கேரக்டருக்கான கெட்டப்பில் இருப்பதால் இப்போது ஃபோட்டோ வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர் படக்குழுவினர். அதனால் அட்லியுடன் மட்டும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறார். அங்கு தான் அந்த ஃபோட்டோ ரிலீஸாகியிருக்கிறது.

அட்லியுடன் எடுத்த ஃபோட்டோவிற்குப் பின்னால் விஜய் மைக் முன்பு நின்று பேசுவதுபோலவும், அவருக்குப்பின்னால் இந்திய தேசியக் கொடியும், கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை கலந்த இன்னொரு கொடியும் இடம்பெற்றிருப்பது தெரிகிறது. தமிழகத்தை ஆட்சிசெய்துவரும் திராவிட கட்சிகளின் கொடிகளில் அதிக அளவு பயன்படுத்தப்பட்ட கருப்பு சிகப்பு கலந்த கொடி இந்தப்படத்தின் பாடல் காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதுதான் தற்போது ட்விட்டரின் ஹாட் டிரெண்டிங்.

இந்த ஃபோட்டோவை வைத்து எந்தக்கட்சிக்கு ஆதரவாக அல்லது எதிராக விஜய் களமிறங்குகிறார் என்று அலசி ஆராயவேண்டியதில்லை . இந்தக்காட்சி படத்தில் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய கேள்வியல்லவா?

ஃபோட்டோவை படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த ஃபோட்டோ உருவாக்கியிருக்கும் பிரச்னையையும் ஃபார்வேர்டு செய்தோம். நினைத்தபடி ஃபோன் வந்தது. முதல் கேள்வியே **ஏன் பாஸ் இப்படி பன்றாங்க?** என்பதுதான். என்னதான் நடக்குது அங்க? என்று கேட்டதும் விளக்கினார்கள்.

**ஃபாரீன்ல படிச்சுட்டு ஊருக்கு வர்ற விஜய்யை, பட்டம் வாங்குனதுக்காக அந்த ஊர் எம்.எல்.ஏ விழா எடுத்து பெருமைபடுத்துற சீன் தான் படமா எடுத்துக்கிட்டு இருக்கோம். மத்தபடி அரசியல் மேட்டர் எல்லாம் எதுவுமே இல்லை பாஸ். அவர் அரசியல்வாதின்னா, அவரை வெச்சு எப்படி டேன்ஸ் சீக்குவென்ஸ் எடுப்போம் சொல்லுங்க. அரசியல்வாதியா மாறுனதுக்கு அப்பறமும் டேன்ஸ் ஆட அவர் என்ன எம்.ஜி.ஆரா? படத்துல பொலிட்டிக்கல் மேட்டர் எதுவும் இல்லை பாஸ். இப்படியெல்லாம் ஏதாவது போஸ்டரைப் பார்த்து கிளப்பிவிட்டுட்றாங்க. அப்பறம் படத்துல வேலை செஞ்ச எங்க தலை உருளுது** என்று எமோஷனலாகவே பேசினார். இதற்கு முன்னாடியே விஜய்யின் பல படங்களில் வேலை செய்திருப்பீர்கள் போல? என்று கேட்டதும், ஆமாம் பாஸ் என்று சொல்லி ஃபோனை அணைத்தார். கேட்க நினைத்ததை மறந்துவிட்டதால் **நீங்க சொன்னத உங்க பேர்லயே போட்டுவிடவா?** என்று வாட்ஸப் செய்ததும், **உங்களால எந்த பிராப்ளமும் வராதுன்னு சொன்னதாலதான் நான் பேசினேன்** என்று சொன்னார்.

விஜய்க்கு மட்டும் தான் அரசியலால் பிரச்னை என்று பார்த்தால் அவர் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அவரது ஆக்‌ஷன்களின் ரியாக்‌ஷன் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டியது, அந்தக் கட்சியின் அரசியல்வாதியாக வருபவர் நகைச்சுவை நடிகர் ‘மொட்ட’ ராஜேந்திரன். விஜய் தீவிர அரசியலைப் பேசப்போகிறாரோ இல்லையோ, ராஜா ராணி படத்தில் வந்ததுபோல ராஜேந்திரனை வைத்து அரசியல்வாதிகளை செம கலாய் கலாய்க்கப்போகிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *