N5ஜி நெட்வொர்க்: இந்தியா தயார்!

public

5ஜி தொழில்நுட்பச் சேவையில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ‘கன்வெர்ஜன்ஸ் இந்தியா 2018’ என்ற மூன்று நாள் கண்காட்சி தொடங்கியுள்ளது. தொலைத் தொடர்புத் துறை சார்ந்த அம்சங்களும் தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்படும் இந்தக் கண்காட்சியில் துவக்க நாளான மார்ச் 7ஆம் தேதி மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா பங்கேற்றுப் பேசுகையில், “தொலைத் தொடர்புச் சேவைகளில் மிகவும் முக்கியமான வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக 5ஜி நெட்வொர்க் உள்ளது. இப்பிரிவில் செயல்பட்டு வரும் உலக நாடுகளுடன் நாங்களும் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறோம். 5ஜி சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவும் தனது பங்களிப்பை வழங்கும்” என்றார்.

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று சமீபத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்திருந்தது. மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான அருணா சுந்தரராஜன், “இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான அரசின் செயல் திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். சர்வதேச அளவில் 5ஜி சேவைக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் விதமாக அதிசிறந்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 5ஜி தொழில்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கும்” என்று கூறியிருந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *