Nஆப்பிள் இறக்குமதியில் சரிவு!

public

இந்தியச் சந்தையில் இத்தாலி நாட்டு ஆப்பிள்களுக்கான வரவேற்பு குறைந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான இத்தாலி நாட்டு ஆப்பிள்களின் இறக்குமதி குறைந்துள்ளது.

இதுகுறித்து கான்சொர்சியோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பிரிவு மேலாளர் ஆண்ட்ரியஸ் பிர்செர் கூறுகையில், “இத்தாலி நாட்டு ஆப்பிள்களுக்கு இந்தியா, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சென்ற ஆண்டு இந்தியா 16,000 டன் ஆப்பிள்களை இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டில் இதில் 10 சதவிகிதம் கூட இறக்குமதி செய்யப்படவில்லை. இத்தாலி ஆப்பிள்களுக்கான தேவை மற்ற நாடுகளில் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதன் உற்பத்தி குறைந்துள்ளதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியிலிருந்து இந்தியா வரும் வரை ஆப்பிளின் தரம் குறையாமல் நுகர்வோர் விருப்பத்திற்குள்ளானதாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இத்தாலி ஆப்பிள்கள் ஐரோப்பியர்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. காலா ஆப்பிள்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் ஐரோப்பாவுக்கான விற்பனை எளிதாகிறது” என்றார். பொதுவாக இந்தியாவில் சிகப்பு ஆப்பிள்கள், ரெட் சீஃப், காலா மற்றும் கிரானி ஸ்மித் ஆப்பிள்கள் அதிகம் நுகரப்படுகின்றன. ஆனால், ஆசிய கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளில் சிறிய முறுமுறுப்பான இனிப்பான ஆப்பிள்களே வரவேற்கப்படுகின்றன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *