�மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: நெட்வொர்க் நிறுவனங்கள்!

public

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ளதால் மொபைல் டேட்டா அதிகரித்திருப்பதாகவும், இதனால் தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போன்களில் உள்ள ஹாட் ஸ்டார் உள்ளிட்ட செயலிகளில் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளையும் பார்த்தும் மக்கள் பொழுதைக் கழிக்கின்றனர். இதுமட்டுமின்றி ஐடி நிறுவனங்கள், மின்னணு ஊடகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக வழக்கத்தை விட இந்தியா முழுவதும் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரித்திருக்கிறது. நாளொன்றுக்குக் கொடுக்கப்பட்ட அளவையும் தாண்டி டேட்டா தேவைப்படுவதால் கூடுதலாக ரீசார்ஜ் செய்யும் நிலையும் ஏற்படுகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்களுக்காக ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளையும் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக, தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் இயக்குநர் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், “கடந்த சில நாட்களாக நாடெங்கும் டேட்டா பயன்பாடு 20 முதல் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதனால் தொழில்நுட்ப ரீதியிலான சுமை அதிகரித்திருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் டேட்டா வேகம் குறையும். எனவே தேவையான பயன்பாட்டிற்கு மட்டும் டேட்டா பயன்படுத்திக் கொள்ள மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்மூலம் தொலைநிலை வேலை, ஆன்லைன் கல்வி, ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் ஹெல்த்கேர், மற்றும் பிற முக்கியமான சேவைகள் சுமுகமாகவும் தடையில்லாமலும் இயங்க முடியும். சில பயனர்கள் அதிகாலை அல்லது மாலை வேலைகளில் வேலை செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இணையம் வழியாகத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஓடிடி ஸ்ட்ரீமிங்கை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நெட்வொர்க் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த கோரிக்கையை ஏற்று நெட்ஃபிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற பல ஸ்ட்ரீமிங் பிளேயர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கி வந்த ஹெச்டி ஸ்ட்ரீமிங்கில் இருந்து எஸ்டி ஸ்ட்ரீமிங்கிற்கு மாறுவதாக அறிவித்துள்ளன. சோனி, கூகுள், ஃபேஸ்புக், வியாகாம் 18, எம்எக்ஸ் பிளேயர், ஹாட்ஸ்டார், ஜீ, டிக் டாக், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ ஆகியவையும் இதைச் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளன.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *