mதாய்மொழிக்கே முக்கியத்துவம்: ஆர்எஸ்எஸ்!

public

‘மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி என்பது அவர்களின் தாய்மொழி அல்லது அந்தப் பிராந்திய மொழியில் இருக்க வேண்டும்’ என ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வருடாந்திர கூட்டம் நாக்பூரில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், பிராந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பயிற்றுவிப்பது, கல்வி உபகரணங்கள் மற்றும் தேர்வு எழுதுவது போன்ற அணைத்துமே இந்திய மொழிகளிலேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “பாரதத்தில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க வழிவகைகளாக மொழிகள் உள்ளன. தாய்மொழி மீது பற்றுகொள்ளும் அதேவேளையில், மற்ற மொழிகளுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். பரந்த அறிவைப்பெற உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும் என்பதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். அதேவேளையில், இந்தியா போன்ற பலமொழிகள் உள்ள நாட்டில், அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது கடமை” என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது

மேலும், அரசு மற்றும் நீதித் துறையில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதோடு, நீட் தேர்வில் பிராந்திய மொழிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய பொதுச்செயலாளராக சுரேஷ் என்ற பையாஜி ஜோஷி நான்காவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியைத் திணிப்பதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதைத் திசை திருப்பும் வகையிலேயே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆர்எஸ்எஸ் கையில் எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *