mஇளைஞர்களைக் குறிவைக்கும் ஆன்லைன் மோசடி!

public

இளைஞர்களைக் குறிவைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை எழும்பூரில் இன்று (நவம்பர் 30) நடைபெற்ற சர்வதேச கணினிப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உரையாற்றினார்.

அதில், “இளையவர்களைக் குறிவைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 2000வது ஆண்டு இயற்றப்பட்ட தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின்படி சட்டரீதியான நிவாரணம் வழங்கவும், நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகரக் காவல் துறை பெரும்பணி ஆற்றிவருகிறது.

தற்போது இளைஞர்கள்தான் கணினியைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்கள் கணினியைப் பயன்படுத்திய பிறகு மற்றவர்கள் அதிலுள்ள தகவல்களை எடுத்து தவறாகப் பயன்படுத்திவிடாதபடி, அதனை முறையாக ஆஃப் செய்ய வேண்டும். அது போன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இது போன்ற இணைய குற்றங்களைத் தடுக்க வழிவகை செய்ய வேண்டும். தேவையில்லாத இணையதளங்களை முடக்க வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக, மின் சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களை பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும், அதன்மூலம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களும் நாம் எந்த தகவலைப் பகிர்கிறோம், எதற்காகப் பகிர்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அது மட்டுமல்லாமல், விலைக் குறைப்பு திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் இலவசத் திட்டம் எனப் பல விளம்பரங்களை வெளியிட்டு மக்களைக் குறி வைக்கும் ஆன்லைன் மோசடிகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்படி தங்களது வங்கிக் கணக்கின் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிரக் கூடாது. சைபர் குற்றப் பிரிவின் கீழ் 10,254 மனுக்கள் பெறப்பட்டு 399 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன” என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *