Lஸ்டிரைக்: நீதிமன்றம் கேள்வி!

public

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சிஐடியு சார்பில் இன்று (ஜனவரி 8) சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் இன்று 5ஆவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் தமிழகமே முடங்கியுள்ளது.. பள்ளி, கல்லூரி, அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்து இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். .

மதுரையில் பைபாஸ் ரோடு, எல்லிஸ் நகர், பழங்காநத்தம், கே.புதூர் உள்ளிட்ட 16 போக்குவரத்து பணிமனைகள் முன்பாக ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 40 சதவிகிதத்துக்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 850 பேருந்துகளில் 351 பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. இதுபோன்று கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து போராட்டம் தொடர்பான வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,”எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு போராட்டம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டு வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. தொழிலாளர்கள் நலனில் அரசு முழுமையாக அக்கறை செலுத்தவில்லை” என்று குற்றம்சாட்டப்பட்டது. அப்போது ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.11380கோடியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், ”போராட்டத்தால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். லட்சக் கணக்கில் செலவு செய்து அவர்களால் அப்பல்லோ செல்ல முடிந்தால் அவர்கள் ஏன் அரசுப் பேருந்துக்காக காத்திருக்கிறார்கள்? இதனால் அமைச்சர்களோ, பணக்காரர்களோ பாதிக்கப்படவில்லை. ஏழை மக்கள்தான் பாதிப்படைந்துள்ளனர்” என்று கூறி நிலுவைத் தொகை வழங்காததுதான் போராட்டத்திற்குக் காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய முடியாது என்றும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவையும் திரும்ப பெற முடியாது என்றும் கூறியுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசிடம் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. போக்குவரத்துத் துறையை நடத்த முடியாவிட்டால் அதனைக் கலைத்துவிட்டுத் தனியார்மயமாக்க வேண்டியதுதானே? தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் என்ன சிக்கல்? இந்தத் தொகை உரிய காலத்தில் வழங்கப்படாதது ஏன் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணை மதியம் 2.15 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *