lபேரரசன் குப்ளாய்கானும் மார்கோபோலோவும்!

public

செங்கிஸ்கான் வம்சாவளியில் வந்த குப்ளாய்கான், செங்கிஸ்கானைவிட அதிகப் பிரச்னைகளை எதிர்கொண்டவர். உள்நாட்டுப் போர், உறவுக்காரர்களின் சதி என மங்கோலிய வம்சத்தில் தனது ஆட்சியை நிலைநிறுத்த அதிகம் போராடிய மாவீரன் குப்ளாய்கானின் அரசவையில், உலகின் முதல் சாகசக் கடற்பயணியான மார்கோபோலோ தங்கியிருந்தார். மார்கோபோலோ தங்கியிருந்த காலத்தில் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப்போர், அடிப்படைப் பிரச்னை ஆகியவற்றை அடிப்படையாகவைத்து உருவாகியிருக்கும் மார்கோபோலோ: War From Within தொலைக்காட்சித் தொடர் வருகின்ற ஜூலை 1 முதல் NETFLIX சேனலில் ஒளிபரப்பாகிறது. இதன் முதல் சீசன் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. உலகின் மிகமுக்கியமான காலகட்டத்தை தொலைக்காட்சி தொடராகத் தரும் முயற்சியில் வெற்றிபெற்றாலும், மக்களை என்டர்டெயின் செய்வதில் தோற்றுவிட்டிருந்தது மார்கோபோலோ டீம். ஆனால், மார்கோபோலோ தொடரின் இரண்டாவது சீசனின் டிரெய்லர், முதல் சீசனில் செய்த தவறை இரண்டாவது சீசனில் தொடரமாட்டார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. மிகப்பெரிய பேரரசனை பின்வாங்க வைத்த காலகட்டத்தை கதையாகக் கொண்டுவரும் இந்த தொலைக்காட்சித் தொடரில் ஆக்‌ஷனுக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்பதையும் டிரெய்லர் காட்டுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *