lதானா சேர்ந்த கூட்டம்: லேட்டஸ்ட் அப்டேட்!

public

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், போஸ்டர், டீசர் ஆகியவை இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் சொடுக்கு பாடல் யூ டியூபில் தற்போது ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதற்கு முன் ஆளப்போறான் தமிழன், சர்வைவா பாடல்கள் குறுகிய நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தின. படத்தின் இரண்டாவது போஸ்டர் இந்தியாவிலேயே அதிக முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தானா சேர்ந்த கூட்டம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இதன் வெளிநாட்டு உரிமையை டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மெர்சல், விவேகம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் உரிமையை ஏற்கனவே வாங்கியது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *