yஇலவச சிகிச்சைகளை நிறுத்தும் மருத்துவமனைகள்!

public

மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்ஸ், பல மருத்துவ சங்கங்களுக்கு மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் வரவேண்டிய பணம் தாமதமாவதாலும், நிலுவையில் இருப்பதாலும், இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதை நிறுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின்(சிஜிஎச்எஸ்) கீழும், எக்ஸ்-சர்வீஸ்மென் கான்ட்ரிபியூட்டரி ஹெல்த் திட்டத்தின்(இசிஎச்எஸ்) கீழும் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு வரவேண்டிய பணம் ரூ.1000 கோடி நிலுவையில் இருப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா ஹெல்த்கேர் ப்ரொவைடர்ஸ் அசோஷியேசன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் குறைந்தது 3.2 மில்லியன் மக்கள் சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழும், 5,50,000 பேர் இசிஎச்எஸ் திட்டத்தின் கீழும் உள்ளனர்.

இந்தியா ஹெல்த்கேர் ப்ரொவைடர்ஸ் அசோஷியேசனின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கிர்தார் கியானி கூறுகையில், சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்துவதாக நாங்கள் சொல்லவில்லை. பணமில்லா சிகிச்சை முறையை நிறுத்துவதாக தான் சொல்கிறோம். சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் முதலில் பயனாளிகள் மருத்துவமனையில் பணத்தைக் கட்டலாம். பின்னர் அதனை அரசிடம் இருந்து பெற்று கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

லீலாவதி, இந்துஜா, அப்பல்லோ, மேக்ஸ், ஃபோர்டீஸ், கங்கா ராம், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ நிறுவனங்களும் 10,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா ஹெல்த்கேர் ப்ரொவைடர்ஸ் அசோஷியேசனில் அடங்கும்.

**தாமதமாகும் கட்டணங்கள்**

டெல்லி தன்னார்வ மருத்துவமனைகளின் மன்ற செயலாளர் டாக்டர் பி.கே.பாரத்வாஜ் கூறுகையில், ‘எந்த திட்டத்தின் கீழும் சரியான நேரத்திற்குப் பணம் செலுத்தப்படுவதில்லை. சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் பணம் பெற 6 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் சம்பளம் கொடுப்பது, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது ஆகியவற்றில் சிக்கலான சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பில்கள் நிலுவையில் உள்ளன. 2014ல் சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கக் கையெழுத்திடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணம் நிலுவையில் இருப்பதால் மருத்துவமனைகள் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த பிரச்சினையைச் சமாளிப்பது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சுகாதாரத் துறை அதிகாரி நிதி நெருக்கடி பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த மாத இறுதிக்குள் கூடுதல் நிதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், சிஜிஎச்எஸ் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையைச் சமாளிக்கக் கூடுதலாக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது. இசிஎச்எஸ் திட்டத்தின் கீழ் பணம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *