Hமழையால் தாமதமாகும் ஆட்டம்!

public

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (ஆகஸ்ட் 9) லார்ட்ஸில் தொடங்கவிருந்த டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக தாமதமாகி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையே எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கவிருந்தது. அங்கு பெய்து வரும் மழை மற்றும் ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் நாளின் மதிய உணவு இடைவேளை விரைவில் எடுக்கப்பட்டுள்ளது. 6.30 மணி நிலவரப்படி இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கு மழையின் தாக்கம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

மழையின் காரணமாக தடைபட்ட இன்றைய ஆட்டம், சற்று நேரத்தில் தொடங்கி சிறிது நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஐந்து நாள் போட்டி, நான்கு நாட்களாக மாறுவதால் ஆட்டம் டிரா ஆகவே அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆனால் எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் போன்ற பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் போட்டியின் முடிவைத் தீர்மானிக்க நான்கு நாட்களே போதுமானதாகும்.

கடந்த போட்டியில் ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை இரு அணி வீரர்களும் சரியாக பயன்படுத்தியிருந்தால் போட்டி மூன்று நாட்களுக்குள் முடிவதற்கான வாய்ப்பும் இருந்தது. அப்படி இருந்தும் அந்தப் போட்டி நான்கு நாட்களைத் தாண்டவில்லை. எனவே லார்ட்ஸ் போட்டியின் முடிவை நிர்ணயிப்பதற்கும் நான்கு நாட்கள் போதுமானதாகவே கருதப்படுகிறது. டாஸ் போடாததால் இரு அணி வீரர்களின் விவரம் இன்னும் வெளியாகவில்லை.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *