hதென்காசியில் 24 வயது வேட்பாளர்: சர்ச்சை!

public

தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சேத்தூரைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்பவர், தனது பிரமாணப் பத்திரத்தில் வயது 24 என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக – அதிமுக கூட்டணி சார்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பாக தனுஷ் எம்.குமார், அமமுக சார்பாக சு.பொன்னுத்தாய், நாம் தமிழர் கட்சி சார்பில் சி.ச.மதிவாணன், மக்கள் நீதி மய்யம் சார்பாக முனீஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், ரா.பொன்னுத்தாய் என்ற பெயரில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் சேத்தூரைச் சேர்ந்த கோ.பொன்னுத்தாய் என்பவர் தனக்கு 24 வயது என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேட்பு மனு ஏற்கப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட 25 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டுமென்று விதி உள்ளது. இதனை மீறி, இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இவரது பிரமாணப் பத்திரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வேட்புமனு பரிசீலனையின்போது இந்த தகவலை அதிகாரிகள் கவனிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக அறிவிப்புப் பலகையில் இருந்து 4 பேரின் விண்ணப்பப் படிவங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *