Hகூகுளுடன் இணையுமா ஆப்பிள்?

public

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் முக்கியமான இடங்களைப் பிடித்துள்ளன. அந்நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சில நபர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் வெளிவருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதன்படி, கடந்த புதன்கிழமையன்று ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் மற்றும் கூகிள் நிறுவனத்தில் CEO சுந்தர் பிச்சை ஆகியோர், கலிபோர்னியாவில் பலோ ஆல்டோ நகரில் உள்ள தமரின் என்ற ரெஸ்டாரண்டில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள், புதிய நிறுவனம் தொடங்க திட்டமிட்டனரா?, டிரம்ப் வீசா தடை பற்றி பேசினார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதுபோன்ற பிரபல நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் சந்திப்பது இதுதான் முதல்முறை என்று சொல்லிவிட முடியாது. கடந்த 2010ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ், கூகுள் முன்னாள் CEO எரிக் ச்மிட் உடன் சந்தித்துள்ளார். அப்போதும் இதுபோன்றே மக்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பை வைத்தும் பெரும்பாலான வதந்திகள் வெளியானவண்ணம் இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் அவர்களது சந்திப்பை வைத்து பல்வேறு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவற்றில் **இருவரும் புதிய நிறுவனங்கள் தொடங்கியுள்ளனர் அதற்கு Gapple அல்லது iDroid என பெயரிடவுள்ளனர்** என்றும், **அவர்கள் இருவரின் நிறுவனத்திலும் பெரும்பாலும் இந்தியர்கள் முக்கியப் பொறுப்பில் உள்ளதால் டிரம்ப் வீசா தடைபற்றி பேசியிருப்பார்கள்** என்றும் பதிவிட்டிருந்தனர். அதுமட்டுமின்றி, இந்தச் சந்திப்பை பற்றி கிண்டல் செய்யும்விதத்தில் ஒரு கேள்வியையும் பதிவிட்டிருந்தனர் சிலர். அதில் **யார் பில் கொடுத்திருப்பார்கள்** என்று கேள்வியை எழுப்பியிருக்கின்றனர் நெட்டிசன்கள். பல்வேறு வதந்திகள் வெளியானாலும் அவர்கள், இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்திக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *