இந்தாண்டும் பட்டாசு வெடிக்கத் தடை!

public

டெல்லியில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக டெல்லியில் மாசு கட்டுக்குள் கொண்டுவரப்ப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதால் மீண்டும் காற்று மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், “ டெல்லியின் காற்று மாசுபாட்டின் ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வகையான பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல தடை விதிக்கப்பட்டது. இதனால் வணிகர்களுக்கு நஷ்டம் ஏற்படுவது உண்மைதான். இருப்பினும் சிலர் முறைகேடாக பட்டாசுகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதனால் தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது. இந்தாண்டு யாரும் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *