dகோடிகளை வீணடித்த இந்திய நிறுவனங்கள்!

public

2017-18 நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் சுமார் ரூ.7.63 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களைப் பாதியிலேயே கைவிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தனியார் முதலீடுகளை மேம்படுத்தவும் அதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த 2017-18 நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் பல கைவிட்ட திட்டங்கள் வாயிலாக ரூ.7.63 லட்சம் கோடி முதலீடுகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ.3.3 லட்சம் கோடி (40%) மதிப்பிலான திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாகத் தொடங்கப்படும் திட்டங்களுக்கான ஒப்புதல் பெறும் நடைமுறையில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட சிக்கல்களால் அத்திட்டங்கள் கைவிடப்பட்டன. ஆனால், இப்போது ஒப்புதல் வழிமுறைகள் எளிதாகியிருந்தாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் தேவைக் குறைவு போன்ற காரணங்களால் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது நிறுவனங்கள் தங்களது தகுதியில் 71.8 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. மேலும், ஸ்டீல், மின்சாரம் உள்ளிட்ட சில துறைகளில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் கிடப்பில் இருக்கும்போது மீண்டும் புதிய திட்டங்கள் பல தொடங்கப்படுவதாகவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் சென்ற மார்ச் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறை முந்தைய ஐந்து மாதங்களை விட மிக மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *