சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகும்: ராதாகிருஷ்ணன்

public

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 3330 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 571 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 563 பேருக்கும், திரு.வி.க.நகரில் 519 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலமானது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. .தினந்தோறும் 3500 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஆகவே, அடுத்த 5- 6 நாட்களுக்குக் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

நோய்த்தொற்று இங்கிருந்து தான் வந்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க பரிசோதனை செய்யாமல் இருப்பதில்லை. சோதனைகளை அதிகப்படுத்தி பரவலைக் குறைப்பதே நோக்கம்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 52 பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும், சென்னையில் தான் அதிகமாக பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்த ராதாகிருஷ்ணன், “கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாதது நல்ல விஷயமாக உள்ளது. எந்த அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மத்திய, மாநில அரசின் அறிவுரைப்படி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும். கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்கள் போல செயல்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *