aகிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை ஜூஸ்

public

சம்மர் ஸ்பெஷல்: மருத்துவச் சாறு!

பருவங்கள் மாறினாலும், எல்லாக் காலத்திலும் கிடைக்கும் ஒரு பொருள் கறிவேப்பிலை. நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலையை மணத்துக்காக மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்றால் அது தவறு. இயற்கை நமக்களித்த மருத்துவத்துக்குக் கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். கோடைக்கு இதமளிக்கும் உணவாகவும் கறிவேப்பிலை இருக்கிறது. நேரடியாக கறிவேப்பிலையை உண்ண மறுப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நன்மையளிக்கும்.

**என்ன தேவை? **

கறிவேப்பிலை – ஒரு கப்

தோல் சீவி துருவிய இஞ்சி – 3 டீஸ்பூன்

உப்பு, தண்ணீர் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சுத்தம் செய்த கறிவேப்பிலையுடன் இஞ்சித் துருவல், உப்பு, தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து வடிகட்டிப் பருகவும்.

**என்ன பலன்? **

நீரிழிவைக் கட்டுப்படுத்தும். கோடையில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. காலையில் இந்த ஜூஸை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான தோற்றத்தைப் பெறலாம்.

[நேற்றைய ரெசிப்பி: பீட்ரூட் லஸ்ஸி](https://www.minnambalam.com/k/2019/04/17/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *