6இந்தியா தோற்றது ஏன்?

public

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2ஆவது போட்டி நேற்று (ஜூலை 14 ) நடைபெற்றது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அத்துடன் அணித்தலைவர் இயான் மோர்கன் மற்றும் டேவிட் வில்லே ஆகியோரின் அரைசதங்களும் இங்கிலாந்து அணிக்கு 322 ரன்களைக் குவிக்க உதவியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 4 ரன்களே எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

323 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்தியா அடுத்து களமிறங்கியது. தற்போதைய இந்திய அணியின் ஃபார்முக்கு இந்த இலக்கு அவ்வளவு பெரிய சவாலானது கிடையாது. அதேபோல இங்கிலாந்தின் பந்து வீச்சும் அவ்வளவாகச் சிறப்பாக இல்லையென்பதால் இந்தியா இதில் எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள நிலவரமோ வேறுமாதிரி இருந்தது. துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் ஷர்மா இதில் வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். மிகவும் எதிர்பார்த்திருந்த கே.எல் ராகுலும் டக் அவுட் ஆனார். தொடக்கத்திலேயே பெரிய விக்கெட்கள் விழுந்ததால் இங்கிலாந்து அணி உற்சாகமானது. ஷிகர் தவான் 36 ரன்கள், அணித்தலைவர் கோலி 45 ரன்கள் சுரேஷ் ரெய்னா 46 ரன்கள் என அடிக்க ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டிய இந்தியாவால் விரைவாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை.

அதன் பின்னர் வந்தவர்களில் தோனி மட்டுமே 37 ரன்கள் அடித்தார். இறுதியாக இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓவர்களில் 236 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய வீரர்களில் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இங்கிலாந்து அணி முடிவில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-1 என இருந்து வருகிறது. அந்த அணியின் பிளங்கெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வானார். அடுத்த போட்டியில் வெல்லும் அணி கோப்பையைக் கைப்பற்றும்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மந்தமாக இருந்தது. குறிப்பாக தோனியின் பேட்டிங் டெஸ்ட் போட்டிகளைப் போல இருந்ததால் ரசிகர்கள் மைதானத்தில் கடுப்பாகினர். நிறைய கேலி கிண்டல்களும்கூட செய்யப்பட்டன.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *