உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் – மோடியை வாழ்த்திய கபில் சிபல்

public

உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 101ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடியை வாழ்த்தி கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்டு வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு இந்தப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தற்போது 2021ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் இடம்பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைவிட இந்தியா பின் தங்கியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ஆம் ஆண்டில் 101ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 17.3 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Congratulations Modi ji for eradicating :
1) poverty
2) hunger
3) making India a global power
4) for our digital economy
5) …………… so much more

Global Hunger Index :

2020 : India ranked 94
2021 : India ranks 101

Behind Bangladesh , Pakistan & Nepal

— Kapil Sibal (@KapilSibal) October 15, 2021

இந்த அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “இவை எல்லாவற்றையும் அழித்தமைக்காக மோடிஜிக்கு வாழ்த்துகள்.

1.வறுமை, 2.பட்டினி, 3. இந்தியாவை சூப்பர் பவர் நாடாக்கியது, 4.நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக்கியது, 5. இன்னும் அதிகமாக…

உலக பட்டினிக் குறியீடு… 2020-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 94-வது இடம், 2021-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 101-வது இடம்… வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைவிடப் பின்தங்கி இந்தியா இருக்கிறது” என்று மோடியை வாழ்த்தி, கபில் சிபல் கிண்டலடித்துள்ளார்.

**-ராஜ்**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *