12 லட்சம் ரூபாயில் நாய் போல் மாறிய நபர்!

public

ஜப்பானில் ஒரு நபர் தனது தோற்றத்தை நாயைப் போல மாற்ற 12 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். அந்த நபர் எந்த அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ முறையிலும் செய்யவில்லை, ஆனால் அவர் ஒரு நாயைப் போல தோற்றமளிக்கும், ஒரு உண்மையான நாய் போன்ற தையல் சூட்டைப் பெற்றார். இதற்காக அவர், திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பல்வேறு சிற்பங்களை தயாரிக்கும் ஸேபேட் என்ற தொழில் நிறுவனத்தை அவர் அணுகினார்.

அந்த நபர் தன்னை ஒரு உண்மையான நாயைப் போல தோற்றமளிக்க கூடிய வாழ்க்கை அளவிலான நாய் உடையை உருவாக்குமாறு ஸேபெட் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். இதுகுறித்து அந்த நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில், “ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், நாங்கள் ஒரு நாய் மாடலிங் உடையை உருவாக்கினோம். இது காலி எனப்படும் இனத்தினுடைய நாயைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான மற்றும் வினோதமான ஆடை சுமார் 40 நாட்களில் தயாரிக்கப்பட்டது மற்றும் இதன் விலை 12 லட்சம் ரூபாயாகும்.” என்று தெரிவித்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், “காலி எனப்படும் நாயின் வகை எனது உடை ரசனைக்கு ஒத்துப்போவதாலும், எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நாயின் உடையை தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த உடையை உடுத்திக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இது மிகவும் வைரலாகி அதிகமாக பகிரப்படுகிறது. நாயின் உடையை உடுத்தி அவர் யூடியூபில் வெளியிட்ட வீடியோ தற்போது 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *