இந்தியன் ரயில்வே – ஐஐடி மெட்ராஸ் இணையும் ஹைப்பர்லூப் திட்டம்!

public

இந்திய ரயில்வே மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இந்தியாவின் சொந்த ஹைப்பர்லூப்பை உருவாக்குவதற்கான கூட்டுப் பணியை தொடங்குகின்றன. இந்த ஹைப்பர்லூப் ரயில், விமானம் போன்ற வேகத்தில் பயணிக்க நிலத்துக்கடியில் குழாய்களில் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

ரயில்வே தொழில்நுட்பத்தில் கார்பன் நடுநிலையை அடைய முயற்சிக்கும் போது ரயில்வே இந்த ஒரு கூட்டு முயற்சி எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ரயில்வேயின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது சாத்தியமில்லை. மேலும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்துக்கு சிறப்பு மையத்தை அமைப்பதற்கும் உதவும் என்று ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஹைப்பர்லூப் பணிகள் இந்திய அமைப்பு செயல்பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள விர்ஜின் ஹைப்பர்லூப் வசதிக்கு இணையாக இருக்கும், ஆனால் செலவு அடிப்படையில் அதை கணிசமாக விஞ்சிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவிஷ்கர் ஹைப்பர்லூப்” என்றழைக்கப்படும் 70 ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் குழு 2017ஆம் ஆண்டு முதல் ஹைப்பர்லூப் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பிற்கு அளவிடுதல் மற்றும் சிக்கனமான பொறியியல் வழிமுறைகளை கண்டறிய ஆரம்பித்தது. அந்த அணி, 2019ஆம் ஆண்டு நடந்த ஸ்பெஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியில் முதல் 10 உலகளாவிய தரவரிசையில் இடம் பிடித்தது. அவர்களின் திட்டம் ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம் 2021 நிகழ்ச்சியிலும் மிகவும் அளவிடக்கூடிய வடிவமைப்பு விருதை பெற்றது.

இந்த ஆண்டு மார்ச் மாதம்,ரயில்வே அமைச்சகத்தை ஐஐடி மெட்ராஸ் அணுகியது. இந்த ஹைப்பர்லூப் திட்டத்தை விளக்கி அதற்கான ரயில்வேயின் ஒத்துழைப்பை முன்மொழிந்தது. மதிப்பீட்டின்படி, இந்த திட்டத்திற்கு செலவு 8.34 கோடி ரூபாயாகும்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *