ஊட்டி தாவரவியல் பூங்கா: 55 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள்!

public

கோடை சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த மலர் கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலர் கண்காட்சி வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதுதவிர மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. ஊட்டியில் கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக மலர் செடிகள் நன்கு வளர்ந்து மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் பூத்து குலுங்குகின்றன. இதை தொடர்ந்து மலர் காட்சி திடலில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ் மற்றும் புதிய ரகங்களான ஆர்னமென்டல்கேர், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், இன்காமேரி கோல்டு, பிகோனியா, கேன்டீப்ட், பென்டாஸ், பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி, பெட்டுன்யா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, டொரினியா உட்பட 200க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டு 35 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *