சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சிக்காக 2.60 லட்சம் வண்ண ரோஜா மலர்கள், கொய்மலர், சாமந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
அதேபோல் உதகை அரசு ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கியது. இதில் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்டமான நுழைவு வாயில், தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, கழுகு, காட்டெருமை, சிறுத்தை, புலி போன்ற விலங்குகளின் உருவங்களை ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 19-வது ரோஜா கண்காட்சி நேற்றுடன் (மே 19) நிறைவடைய இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மே 22 வரை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலர்களை கொண்டு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ள ரோஜா கண்காட்சியை நேற்று வரை 70,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேரட் டீடாக்ஸ் ஜூஸ்!
ஹெலிகாப்டர் ஷாட்டும் கப்பல் ஏறும் மானமும்: அப்டேட் குமாரு
வங்கி கணக்கை முடக்குவதே பாஜகவின் திட்டம் – கெஜ்ரிவால் அட்டாக்!
“1% வாய்ப்பு…”: கோலியின் RCB இப்படி செய்வது இது முதல் முறை அல்ல!