கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை – பனீர் பட்டர் மசாலா

public

மீண்டும் ஊரடங்கு… நிறைய கட்டுப்பாடுகள்… ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி… அதிலும் பெரும்பாலான உணவகங்களில் குறிப்பிட்ட அயிட்டங்கள் மட்டுமே கிடைக்கின்றன. அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமான காலகட்டம்தான். சப்பாத்தி, பரோட்டா, நான் பிரியர்களின் ஃபேவரைட் சைடிஷான இந்த பனீர் பட்டர் மசாலாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

என்ன தேவை?

பனீர் – 200 கிராம்

பச்சை பட்டாணி – அரை கப்

வெண்ணெய் – 100 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – ஒன்று

பால் – ஒரு கப்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மல்லி (தனியா) தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் (அ) கெட்சப் – ஒரு டீஸ்பூன்

கஸூரி மேத்தி ‍ – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் – 5

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் பனீரை தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், ஏலக்காய், தக்காளியை வேகவைத்து நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பால், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் அரைத்த கலவை, இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாடை போகும்வரை வதக்கவும். கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கடைசியாக பனீரை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். கஸ்தூரி மேத்தி, வெண்ணெய் போட்டு மூடிவைக்கவும். சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.

நேற்றைய ரெசிப்பி – WFH – ஒருவேளை உணவுக்கு ‘நோ’ சொல்லுவோம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *