மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

நாட்டின் சிறந்த காவல் நிலையம் கோவையில்!

நாட்டின் சிறந்த காவல் நிலையம் கோவையில்!

காவல் துறை மீது கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழகத்துக்கு ஆறுதலாகவும் பெருமிதமாகவும் கிடைத்திருக்கிறது கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்குக் கிடைத்திருக்கும் விருது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்தியாவிலே சிறந்த காவல் நிலையங்களில் முதன்மைக் காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம்.

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின்போது உள்துறை அமைச்சர் நாட்டில் பத்து சிறந்த காவல் நிலையங்களைக் கண்டறிந்து பட்டியலிட உத்தரவிட்டிருந்தார். அதன்படி குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா குழுவின் மூலம் உளவுத் துறையினர் நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

தமிழகத்தில் இருந்து சென்னை அண்ணா நகர் காவல் நிலையம், கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகக் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கான்பூரில் நடைபெற்ற காவல் துறை தலைவர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான விருதை வழங்க, ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதி பெற்றுக்கொண்டார்.

ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு வாழ்த்துகள் கூறிப் பேசினோம்.

“நன்றி சார்... பொதுமக்கள் பலரும் போன் போட்டு பாராட்டிக்கிட்டிருக்காங்க. நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க வர்றங்களை வரவேற்று உட்கார வைக்க தனியாக வரவேற்பறை இருக்கு. இங்கே தமிழ் ஆங்கில செய்தித் தாள்களும் இருக்கு. புகார் கொடுக்க வர்றவங்களை கனிவாக வரவேற்று விசாரிப்போம். அடுத்ததாக ஆவணங்களைப் பாதுகாக்கறதுல இந்த காவல் நிலையம் சிறப்பான நிலையில இருக்கு. இதுபோன்ற காரணங்களால் விருது கிடைச்சிருக்கு சார். இன்ஸ்பெக்டர் ஜோதி விருது வாங்கிக்கிட்டு டெல்லியில் இருந்து வந்துகிட்டிருக்காரு” என்று சொன்னார்கள் காவலர்கள்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018