2யார் இந்த ஓ.பி.சைனி?

public

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதியரசர் ஓம் பிரகாஷ் சைனி, தனது வாழ்க்கையை டெல்லி காவல் துறையின் துணை ஆய்வாளராகத் தொடங்கியவர். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை ஆகியவற்றால் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தினால், அரசியலில் ஏற்பட்ட தாக்கம் குறித்து எழுந்த விவாதங்களில் இந்த மனிதரின் சிறப்புகள் வெளியே தெரியாமலே இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் உழைத்தவர் சைனி.

அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்கும் முன்பாக அவர் நாட்டின் கவனத்தை ஈர்த்த பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 2011ஆம் ஆண்டு நால்கோ லஞ்ச வழக்கு, 2010இல் காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கு, 2000ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கோட்டை துப்பாக்கிச் சூடு வழக்கு ஆகியவை சைனி விசாரித்த வழக்குகளில் சில.

கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் தனது earned leave எனும் விடுமுறையை பெரும்பாலும் எடுக்காமலேயே விட்டுவிட்டார். அவரது இரண்டு மகள்களுக்கு இந்த கால கட்டத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு திருமணத்தின்போதும் ஒருவார விடுப்பு எடுத்ததோடு சரி.

சைனிக்குத் தற்போது வயது 61. அரசியலில் செல்வாக்குப் பெற்ற பலரையும் இந்த எட்டு ஆண்டுகாலத்தில் சிறைக்கு அனுப்பியவர் (ராசா, கனிமொழி உள்பட). அமைதியானவர். ஆனால், மிகவும் உறுதியானவர். நீதிமன்றத்தின் மாண்பை யாரேனும் சிதைக்க முயன்றால் அவர் மிகவும் கடுமை காட்டுவார். கடும் அபராதம் விதிப்பது முதல் பிணை வழங்க மறுப்பது வரை இவரது கடுமை வெளிப்படும்.

2011ஆம் ஆண்டு மே மாதத்தில் கனிமொழிக்குப் பிணை வழங்க மறுத்தபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர். அவர் பெண் என்பதாலும், ஏற்கனவே பல மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதாலும் பிணை கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் பிணையில் விட மறுத்தார்.

அதேபோல 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியக் குற்றவியல் சட்டம் 319இன் கீழ் ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டல், ஹட்கின்சன் நிறுவனத்தைச் சார்ந்த அசீம் கோஷ், ஸ்டெர்லிங் செல்லுலர் நிறுவனத்தின் ரவி ருய்யா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக ஆணையிட்டார்.

இவர்கள் அனைவருக்கும் சிபிஐ நற்சான்று வழங்கியபோதிலும் அவர்களை விசாரணைக்கு அழைத்தவர் இவர்.

அலைக்கற்றை விவகாரத்தை விசாரித்தபோது சைனியைப் பாராட்டியவர்களும் உண்டு. குறை கூறியவர்களும் உண்டு. அவரது உறுதியும் தைரியமான போக்கும் பாராட்டைப் பெற்றன. அவரது கடுமை குறை கூறப்பட்டது. பல சட்ட மாணவர்களுக்கு சைனியின் நீதிமன்றம் ஒரு வகுப்பறை போல அமைந்தது. கடந்த இருபது வருடப் பணியில் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *