�கன்ஹையா குமார் மீது மீண்டும் தாக்குதல்: அர்னாப்பும் சுதிரும் பொறுப்பேற்க வேண்டும்-சமர்

public

பிரியத்துக்கு உரியவர்கள் அல்லாத அர்னாப் கோஸ்வாமியும், சுதிர் சௌத்ரியுமாகிய நீங்கள் இன்று கடும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். உங்களுடைய சந்தோஷத்திற்கு மிகப்பெரிய காரணம் கிடைத்திருக்கிறதே?

நீங்கள் இருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கன்ஹையா மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்த எவ்வித அழைப்பும் கொடுக்கவில்லை என்று எனக்கு தெரியும். மாற்று கருத்துடையோரை கொல்ல சட்டவிரோத கும்பலை அவிழ்த்துவிடும் தருணத்திலும், சட்டத்தின் வலதுபுறம் நிற்பது எப்படி என்ற வித்தை அறிந்தவர்கள் நீங்கள். வலிமையான புத்திக் கூர்மையுடையவர்கள் உங்களுடைய கருத்துகள் போய் சேர்ந்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பீர்கள், ஏனென்றால், உங்கள் கட்டளைகளை ஏற்று நடப்பவர்கள் சேனை அல்லது தளத்தை சேர்ந்த உதிரிகள் மட்டுமில்லையே. இன்று தெரிவது போல, காஸியாபாத்தில் வசிக்கும் தனிநபர் ஜேஎன்யூ சென்று ‘துரோகி’ கன்ஹையாவுக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் அளவுக்கு உங்கள் செய்தி போய் சேர்ந்திருப்பது குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்தானே.

கன்ஹையா துரோகியில்லை என்ற உண்மையை பற்றி கவலை கொள்ளாது, ஆட்சி அதிகாரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும், அவன் தேசத்துரோகியாக இருக்க முடியாது என்ற உண்மையை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. டெல்லி காவல்துறை கன்ஹையாவின் தேசவிரோத காணொளி எதையும் சாட்சியாக சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால், சட்டம் அவனை பிணையில் வெளியே அனுப்பியிருக்கிறது என்பதையும், வன்முறையை தூண்டாத எந்த விதமான முழக்கமும் தேசவிரோதமாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியதையும் மறந்துவிட வேண்டும். கேதார்நாத் (எதிர்) பீகார் அரசு, பல்வந்த் சிங் (எதிர்) பஞ்சாப் அரசு, அரூப் புயன் (எதிர்) அஸ்ஸாம் அரசு மற்றும் ஸ்ரீ இந்திரா தாஸ் (எதிர்) அஸ்ஸாம் அரசு போன்ற வழக்குகளை அதற்கு உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம். அதில் ஒரு வழக்கு ஜேஎன்யூ தோழர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை போல, இந்தியாவிற்கு எதிராகவும், காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய வழக்கோடு ஒப்பிட்டால், ஒரே அம்சம் கொண்ட வழக்காகவே இருக்கிறது.

அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ”இரண்டு தனிநபர்கள், இரண்டு முறை சில முழக்கங்களை எழுப்பியதால், எவ்விதமான வன்முறையும் தூண்டப்படவில்லை எனும் போது, அவர்கள் மீது 124ஏ பிரிவின் கீழோ, 153ஏ ஐபிசியின் கீழோ வழக்கு தொடுக்க முடியாது. அரசு ஊழியர்களான அவர்கள் மீது வழக்கு தொடர மேலும் ஏதாவது செய்தால் மட்டுமே வழக்கு தொடர்ந்திருக்க முடியும். காவல்துறையினர் வெறும் முழக்கங்கள் எழுப்பியதற்காக கைது நடவடிக்கையில் இறங்கியது என்பது முதிர்ச்சியற்ற நடவடிக்கையாகும். இந்திரா காந்தி இறந்த அந்த உணர்ச்சிமயமான சூழலில், அந்த கைதே சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கியிருக்கக் கூடும் இரண்டு தனிநபர்கள், எழுப்பிய முழக்கத்தால், இந்திய அரசாங்கத்திற்கு சட்டப்படியான அச்சுறுத்தல் உருவாக்கியதாக கருதப்படாது என்பது மட்டுமல்ல, இரண்டு குழுக்களிடையே வெறுப்பை உருவாக்கியதாகவும் ஆகாது.”

அர்னாப் கோஸ்வாமி மற்றும் சுதிர் சௌத்ரி ஆகிய உங்கள் இருவரிடமும் இது போன்ற எந்த புரிதலையும் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால், சகிப்பின்மை வளர்ந்து வருகிற தேசத்தின் பாதுகாவலனாக அறிவித்துக் கொண்ட காவலர்கள் அல்லவா நீங்கள்?

இந்நாட்டின் காவல்துறை, விசாரணை அமைப்பு, நீதிபதி என பல அவதார புருஷர்கள் நீங்கள். அந்த அதிகார தோரணையில்தான் ஜோடனை செய்யப்பட்ட காணொகளிகளை ஆதாரமாக கொண்டு கன்ஹையாவைக் குற்றவாளி என அறிவித்தீர்கள். அதன் மூலம், ஒரு கொலைகார கூட்டத்தை அவனை பின் தொடர செய்திருக்கிறீர்கள்.

இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தாக்குதலுக்கு பொறுப்பேற்று, தாக்குதல் நடத்தியவர்களுக்கு விருது வழங்குவதுதான். அவனையே உங்கள் நிகழ்ச்சியின் ‘அதிர்ஷ்ட கிளி’யாக அமர்த்தியும் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நிகழ்த்துவதை போன்ற தனிநபர் தாக்குதலை இந்தியாவிற்கு அழைத்து வந்ததை பற்றி நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.

இந்திய நீதித்துறையையும், காவல்துறையையும் கலைத்துவிட்டு, உங்களால் உருவாக்கப்பட்ட தேசத்தின் காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க கோருங்கள். அப்படி செய்தால்தான், அவர்கள் பாலின சிறுபான்மையினர் குறித்த உங்கள் கருத்துக்காக, உங்களையும் தாக்குவார்கள், ஏனென்றால், அவர்கள் உங்களைவிட உணர்ச்சிமயமானவர்கள். அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என நான் உங்களை வாழ்த்துகிறேன்.

ஆனாலும், தற்போது நடந்த தாக்குதல் குறித்து உங்களுக்கு சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்யும், இதைவிட மேம்பட்ட தாக்குதலுக்கு திட்டமிடுங்கள். இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர்வினையாக, தாக்கியவரை தாக்காதிருக்கும் ஜேஎன்யூவின் அணுகுமுறை, தனிநபர் தேசியவாத ஓநாய்களுக்கு ஊக்கம் தரத்தான் செய்யும்.

சமர், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்

உணவுக்கான உரிமை நிரலின் ஆசிய சட்ட மையம், ஆசிய மனித உரிமை கழகம், ஹாங்காம்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *