]ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

public

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவது 1.7.15 முதல் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது, போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடிக்குப் பயந்து சில மாதங்களுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டினர். நாளடைவில், மெல்ல மெல்ல இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியாமல் ஓட்டத் தொடங்கினர். அந்த சமயங்களில் போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்துக்குள்ளாகும்போது உயிரிழப்புகள் அதிகரித்தன.

மதுரையில், கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி 225 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதனால், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழக்கும் அபாயத்தைத் தடுக்கும்நோக்கில், மதுரை மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால், மதுரையில் உள்ள முக்கிய சாலைகளில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களை போக்குவரத்து போலீஸார் தடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதில், முதன்முறையாக ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி போலீஸாரிடம் பிடிபடுபவர்களுக்கு ரூ.100 அபராதமும், இரண்டாவது முறையாக ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.300 அபராதமும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீஸாரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தினர். மதுரையைப் போல, தமிழகம் முழுவதும் போலீஸாரின் இந்த நடவடிக்கை பரவலாக்கப்படும் என்று கூறப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *