<மோடி மேஜிக் என்னவானது?

public

பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 2014 -ல் ஆட்சிக்கு வந்த மோடியைக் கண்டு உலகம் வியந்தது!

மோடி ஆட்சிக்கு வந்த அன்று பங்குச்சந்தை மிகப்பெரிய உச்சத்தை தொட்டது. நீண்ட காலத்தின் பின்னர் இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த மோடியின் மீது இருந்த எதிர்பார்ப்பு இப்போது குலைந்து விட்டதா?

மோடி பிரதமராக பதவியேற்ற போது பங்குச் சந்தை உச்சம் தொட்டது ஆனால் இப்போது 2014 – ல் இருந்த அதே பழைய நிலைக்கு திரும்பி விட்டது.டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இவ்வளவுக்கும் காரணம் யார்?

அன்று வளர்ச்சியின் நாயகனாக யாரை கைகாட்டினார்களோ, அவரையே இப்போதும் கைகாட்டுகிறார்கள். ஆனால் மோடி மட்டும் தான் காரணமா? என்றால் உலக பொருளாதாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.காரணம் கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் உலகச் சந்தை ஆட்டம் கண்டிருக்கிறது.இதற்கு சீனாவும் விதிவிலக்கல்ல,இதற்கு வேறு சில காரணங்களையும் சுட்டிக் கட்டுக்கிறார்கள்.

வங்கிகள் முன்பு போல சிறு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதில்லை, 70 சதவீத வங்கிகள் தனியார் வங்கிகளாக இருக்கின்றன.அவர்கள் வீட்டுக்கடன், இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன்களைக் கொடுப்பதில்லை,ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி வங்கிகள் கடந்த 2015 -ம் ஆண்டு அக்டோபர் வரை வெறும் 4.5 சதவீத அளவிற்கே கடன் வழங்கியுள்ளனர்.ஆனால் இது 2014 -ல் 7.8 சதவீதமாக இருந்திருக்கிறது.

நிறுவனங்களின் உற்பத்தி கடந்த ஆண்டு மாதம் நவம்பர் 1.3 சதவீதம் சரிந்திருக்கிறது.டிசம்பர் 2014 -ல் மக்களின் வாங்கும் திறனுக்கான குறியீடு 54.5 சதவீதமாக இருந்தது.ஆனால் 2015 – டிசம்பரில் இது 49.1 சதவீதமாக குறைந்திருக்கிறது.இது ஒருபுறம் இருக்க,இந்தியாவிற்கு வரும் புதிய முதலீடு 74 சதவீதம் குறைந்திருக்கிறது.2014ல் 4.06 லட்சம் கோடியாக இருந்த முதலீடுகள் 1.05 லட்சமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் ஒருபக்கம் என்றால் அரசு உற்பத்தி மற்றும் சேவை வரியில் மாற்றம் செய்வது தொடர்பான மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.காரணம் பாரதிய ஜனதா கட்சிக்கு மேலவையில் முழு பலம் இல்லை.காங்கிரஸ் மனது வைத்தால் இது நடக்கும்.இந்த மசோதா ஏப்ரல் மாதம் நடக்கும் பட்ஜெட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால் அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *