{பேருந்தை ஓட்டிய குரங்கு: ஓட்டுநர் இடைநீக்கம்!

public

பயணிகள் பயணம் செய்த பேருந்தைக் குரங்கிடம் கொடுத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தேவநகரிப் பிரிவில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் பிரகாஷ். கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று, பரமசாஹராவுக்கு தேவநகரி சென்ற பேருந்தை இவர் இயக்கினார். அப்போது, அவரது இருக்கையின் முன்பு ஒரு குரங்கு உட்கார்ந்தது. அதனிடம் ஸ்டீரியங்கைக் கொடுத்து, “அப்படி ஓட்டு, இப்படி ஓட்டு” என்று கூறியிருக்கிறார் ஓட்டுநர் பிரகாஷ். குரங்கும் அவர் சொன்னபடி பேருந்தை இயக்கியிருக்கிறது. இந்த காட்சிகளைப் பார்த்த ஒரு பயணி, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

பயணிகள் பயணம் செய்த பேருந்தைக் குரங்கிடம் ஓட்டக் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். விசாரணை முடியும்வரை, அவர் பேருந்தை இயக்க முடியாது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அம்மாநிலப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “அந்தத் தடத்தில் தினமும் பேருந்தை இயக்குபவர் பிரகாஷ். அவர் விலங்குகளின் மீது அதீத அன்பு கொண்டவர். அந்தக் குரங்கை, குரங்காட்டி ஒருவர் கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த குரங்கு தானாக ஓட்டுநர் இருக்கையில் வந்து அமர்ந்துள்ளது. விரட்டினாலும் போகவில்லை. பிறகு பயணிகளின் முயற்சியால் குரங்கு வெளியேற்றப்பட்டது. எப்படி இருந்தாலும் ஓட்டுநர் ஸ்டீரியங்கைக் குரங்கிடம் கொடுத்ததை ஏற்க முடியாது” என்று இன்னொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *