துப்பாக்கிச் சூடு: இலங்கை அதிபர் விசாரணைக்கு உத்தரவு!

public

தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின் (ஐ.ஓ.ஆர்.ஏ) இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் துணைஜனாதிபதி அன்சாரி சென்றுள்ளார். அதேபோல, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, இலங்கை அதிபர் சிறிசேனவை துணை ஜனாதிபதி அன்சாரி தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பேசினார்.

அப்போது பேசிய சிறிசேனா, இச்சம்பவம் தொடர்பாக இலங்கை படைத்தளபதியிடம் நான் பேசினேன். இலங்கை கடற்படை சார்பில் அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படை அடிக்கடி இதுபோன்று நடந்துகொள்வதாக அன்சாரி சிறிசேனாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது இலங்கை கடற்படையால் 76 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் அன்சாரி, சிறிசேனாவிடம் பேசியதாக கூறப்படுகிறது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *