^தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர்!

public

கன்னடத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘லூசியா’, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சதீஷ் நீனசம் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் தற்போது தமிழில் நேரடியாக அறிமுகமாகவுள்ளார். ‘திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஷ் இயக்கும் அடுத்தப் படத்தில், சதீஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமையான த்ரில்லராக, உலக புகழ்பெற்ற காவியத்தையும், இதுவரை பதிவு செய்யப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவு ஷண்முக சுந்தரம். படத்தொகுப்பு மு. காசி விஸ்வநாதன். பர்பிள் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிரி-புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் வாய்ப்பு பற்றி நடிகர் சதீஷ், **“லூசியா படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. அதில், தமிழ்ப் படங்களும் அடக்கம். ஆனால், நல்ல கதையில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். இயக்குநர் அனிஷ் இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை. நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்”** என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *